முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெண்டுல்கரின் சோகம் தொடர்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்ன.பிப்.25 - சென்னை டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடிய சச்சின் நேற்று  சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேதன் லயனின் அபாரமான ஆஃப் ஸ்பின் பந்துக்கு சச்சின் பவுல்டு ஆனார். 81 ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

சாதாரணமாக இது போன்ற பந்தை மேலேறி வந்து ஆடுவார். ஆனால் இந்த முறை ஏனோ அவர் காலை முன்னால் நன்றாகப் போட்டும் பந்தை ரீச் செய்ய முடியவில்லை.

டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிறது. சதம் அடிக்க இயலாமல் அவரது சோகம் தொடர்கிறது. சென்னை டெஸ்டில் சதம் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். தெண்டுல்கர் கடைசியாக 2011​ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் சதம் (146) அடித்தார்.

அதன்பிறகு அவர் விளையாடும் 18​வது டெஸ்ட் இதுவாகும். 31 இன்னிங்சில் விளையாடி அவர் சதம் அடிக்கவில்லை. 91 ரன் (ஓவல்), 94 (மும்பை, வெஸ்ட்இண்டீஸ்), 80 (சிட்னி) ஆகிய ரன்களில் ஆட்டம் இழந்து சதத்தை நழுவவிட்டார்.

தற்போது சேப்பாக்கத்தில் 81 ரன்னில் ஆட்டம் இழந்ததன்மூலம் அவரது 42 வது சதம் எடுக்கும் சாதனை மைல் கல்லில் தடைகள் ஏற்பட்டுள்ளது. சர்வதேச போட்டியில் தெண்டுல்கர் கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சதம் அடித்தார். வங்காளதேசத்துக்கு எதிராக டாக்காவில் நடந்த ஒருநாள் போட்டியில் அவர் 114 ரன்கள் எடுத்தார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் மட்டும் இருக்கிறார். தெண்டுல்கர் 195 டெஸ்டில் 51 சதமும் 463 ஒருநாள் போட்டியில் 49 செஞ்சூரியும் அடித்தார். சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சதம் அடிக்காவிட்டாலும் அவரது ஆட்டத்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. 

நேற்று முன்தினம் தொடர்ந்த இந்தியாவின் சரிவை அவர் தடுத்து நிறுத்தி ரன்களை அதிகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்