முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி கூட்டத்தில் பேசுவகற்கு 2 லட்சம் டாலர்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப்.25 - அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஒருமுறை கூட்டத்தில் பேசுவகற்கு  2 லட்சம் டாலர் கட்டணம் பெறுகிறார். இவர் தற்போது பல இடங்களில் உரையாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக அவர்  பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு மாதம் 1 லட்சத்து 86 ஆயிரம் டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது பதவியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட  ஹிலாரி கிளிண்டன் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஹாரிவாக்கர் ஏஜென்ஸியில் இணைந்துள்ளார்.

அங்கு அவர் மிக முக்கியமான உரைகளை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரியின் கணவரான கிளிண்டன் அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் 11 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் மூலம் 471 உரைகளை நிகழ்த்தி உள்ளார். கிளிண்டன் ஒருமுறை            

பேச 1 லட்சத்து 89 ஆயிரம் டாலர் சம்பளம் பெற்றார்.இதேபோல் அந்த ஏஜென்ஸியில் அர்னால்டு ஸ்வாஸ் நேகர், அல்கோர், டிக் சென்னி ஆகியோரும்  6 இலக்க சம்பளம் பெற்று வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது, ஹிலாரி கிளிண்டனும் இணைந்துள்ளார். அவரது அரசியல் ரீதியான பேச்சு பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தான் பெறும் சம்பளத்தை ஏழை, எளியவர்களுக்கு வழங்க ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளார்.  அவர் ஒரு கூட்டத்தில் பேச 2 லட்சம் டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்