முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாசலப் பிரதேசத்தில் 19 பேருக்கு பன்றிகாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

சிம்லா,பிப்.25 - இமாசலப்பிரதேசத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு 2 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 19 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. நாட்டின் வடபகுதியில் உள்ள மலைப்பிரதேசமான இமாசலப்பிரதேச மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் அறிகுறி காரணமாக தலைநகர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 102 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பன்றி காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். மாநிலத்தின் பெரிய மாவட்டமான கங்காராவில் 2 பேரும்,சோலன் மாவட்டத்தில் ,சிம்லாவில் 4, உனா, திர்மவூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில்தான் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் எய்ட்ஸ் நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago