கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் நரேந்திரமோடிக்கு தொடர்பு ஐ.பி.எஸ். அதிகாரி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
Narendra-Modi 12

 

புதுடெல்லி, ஏப். - 23 - 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கும் தொடர்பு இருப்பதாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய்பட் குற்றம் சாட்டியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பாக பிரமான பத்திரம் ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.  2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் தான் பங்கேற்றதாக பிரமான பத்திரத்தில் கூறியுள்ள அவர், அந்த கூட்டத்தில் நரேந்திர மோடி சில உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் அதை மூத்த போலீஸ் அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரமான பத்திரத்தை தாக்கல் செய்ததாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பட் தெரிவித்தார். எனவே தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் சஞ்சய் பட் சுப்ரீம் ஓகர்ட்டில் வேண்டுகோள் வைத்துள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 1 ம் தேதி ஆமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில்தான் மோடி மீது குற்றம் சாட்டி மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சய் பட் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: