முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும்

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு, பிப். 23  - சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து விடும் என் று இலங்கை கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டனான அர்ஜுன ரணதுங்கா வருத்தம் தெரிவித்து இருக்கிறார். 

மேலும், டெண்டுல்கருக்கு 39 வயதா   ன போதிலும், தற்போதைய இளம் வீர ர்களை விட அவர் நல்ல உடல் நலத்து டன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்றும் அர்ஜுனா பாராட்டி இரு க்கிறார். 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி நிகழ்ச் சி ஒன்றிற்காக பெங்களூர் வந்திருந்த அவர் இடையே நிருபர்களைச் சந்தித்த போது, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 1996 -ம் ஆண்டு உலகக் கோப்பையை வெ ன்றது. அப்போது இலங்கை அணிக்கு தலைமை வகித்தவர் அர்ஜுன ரணதுங் கா என்பது குறிப்பிடத்தக்கது. 

டெண்டுல்கர் கடந்த 20 ஆண்டுகால மாக கிரிக்கெட் விளையாடி வந்த போதிலும், இன்னும் சில வருடம் ஆடும் அளவிற்கு அவரிடம் திறமையு ம், உடல்தகுதியும் உள்ளது என்றும் ரணதுங்கா தெரிவித்து இருக்கிறார். 

சர்வதேச கிரிக்கெட் பிரச்சினையான டி.ஆர்.எஸ். முறை குறித்து அவரிடம் கேட்ட போது, இந்தப் பிரச்சினையில் ஐ.சி.சி. பல்லில்லாமல் பேசி வருகிறது என்று அவர் சாடினார்.  

இலங்கை அணியின் முன்னாள் கேப்ட னான அர்ஜுன ரணதுங்கா நிருபர்களி டம் தெரிவித்ததாவது - 

டெண்டுல்கர் போன்ற சிறந்த வீரர்கள் ஒய்வு பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட் விரைவில் அழிந்து விடும். எனவே அவர் தொடர்ந்து டெஸ்டில் ஆட வே ண்டும் என்று நான் ஆண்டவனை பிரா ர்த்திக்கிறேன். ஒரு நாள் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் பொ றுத்தவரை டெஸ்ட் போட்டி என்பது நல்ல பாடங்களை கற்பிக்கும் ஆட்ட மாகும். ஒரு நாள் போட்டி என்பது பொழுது போக்கு அம்சமாகும். 

டெண்டுல்கர் இன்னும் ஒரு சில வருட ங்கள் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களை விட அவர் நன்றாகவே ஆடுகிறார். அவர் ஒரு போட்டியில் நன்கு ஆடி விட்டால் அடுத்து 2, 3 வருடத்திற்கு பிரச்சினை இருக்காது. டி.ஆர். எஸ். முறையில் ஐ.சி.சி. யின் செயல்பாடுக ள் திருப்தி அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்