ஜப்பானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, பிப்.26 - கிழக்கு ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள டோசிகி என்ற இடத்தை மையமாகக் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2க பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் டிபுகுஷிமா அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமிக்கு 19,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: