முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கொரியா முதல் பெண் அதிபர் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

சியோல், பிப். 27 - தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக பார்க் கியூன் ஹை பதவியேற்றுக் கொண்டார். பின்னர் துவக்கவுரையாற்றிய அவர் வடகொரியா உடனடியாக அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

தலைநகர் சியோலில் நாடாளுமன்ற வளாகம் முன்பு கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் மக்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக ராணுவம் சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொண்டு வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுத சோதனை கொரிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு மக்களின் உயிருக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எத்தகைய நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே அணு ஆயுத சோதனையை வட கொரியா உடனடியாக கைவிட வேண்டும். அதே நேரம் தேர்தல் வாக்குறுதிப்படி வடகொரியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்