டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியை சமன் செய்த தோனி

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.27 - ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையில் இந்திய அணிக்கு நேற்று 21​வது வெற்றி கிடைத்தது. இதன்மூலம் அதிக டெஸ்டில் வெற்றி பெற்ற கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி 44 டெஸ்டில் 21-​ல் வெற்றி பெற்றது. 12 போட்டியில் தோற்றது. 11 டெஸ்ட் டிரா ஆனது. கங்குலி 49 டெஸ்ட்டுக்கு கேப்டனாக பணியாற்றினார். இதில் 21 போட்டியில் வெற்றி கிடைத்தது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் டிரா ஆனது. இன்னும் ஒரு டெஸ்டில் வென்றால் தோனி புதிய சாதனை படைப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: