முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் சீக்கிய டிரைவர் மீது துப்பாக்கி சூடு

செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

புளோரிடா, பிப். 27 - அமெரிக்காவில் சீக்கிய லாரி டிரைவரை இனவெறி காரணமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவை சேர்ந்தவர் கன்வல்ஜித்சிங் (46). சீக்கியரான இவர், லாரி டிரைவராக உள்ளார். இவர் தனது மகனுடன் டேடோனா கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுனர்கள் அவரையும், மகனையும் கடுமையாக தாக்கினார்கள். மேலும் துப்பாக்கியால் சுட்டனர். இதில், கன்வல்ஜித்சிங் தொடை மற்றும் உடலில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் கன்வல்ஜித்சிங்கின் மகன் காயமின்றி தப்பினார். இதுகுறித்து போர்ட் ஆரஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இவர்களுக்கு இடையே முன்விரோதம் எதுவும் இல்லை என விசாரணையில் தெரிய வந்தது. எனவே இவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகளிடம் சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago