ஒரு நாள்: மே.இ.தீவு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கிரனேடா, பிப். 28 - ஜிம்பாப்வே  அணிக்கு எதிராக கிரனேடா தீவில் நடைபெற்ற 3 -வது ஒரு நா ள் போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், டிவைன் பிராவோ அபார மாக பேட்டிங் செய்து அரை சதம் அடி த்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந் தார். அவருக்கு பக்கபலமாக பொவெல், கேப்டன் ஜே. பிராவோ, கீப்பர் ராம்டின் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது,பெர் மாள் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். அவரு க்கு ஆதரவாக ஜே. பிராவோ மற்றும் பெஸ்ட் ஆகியோர் பந்து வீசினர். 

ஜிம்பாப்வே அணி எம். டெய்லர் தலைமையில் மே.இ.தீவில் சுற்றுப் பய ணம் மேற்கொண்டு கேப்டன் ஜி. பிரா வோ தலைமையிலான அணிக்கு எதி ராக விளையாடி வருகிறது. 

மே.இ.தீவு மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 -வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிரனேடா தீவில் செயின்ட் ஜார்ஜ் நகரில் உள்ள தேசிய கிரிக்கெட் அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்னை எடுத் தது. அந்த அணி வீரர்கள் யாரும் அரை சதத்தை தாண்டவில்லை. 

7 - வது வீரராக இறங்கிய சிபாபா அதி கபட்சமாக, 62 பந்தில் 48 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அட க்கம். தவிர, துவக்க வீரர் சிபாண்டா 60 பந்தில் 41 ரன்னும், கேப்டன் டெய்லர் 38 பந்தில் 39 ரன்னும், சக்கப்வா 17 ரன் னும், வாலர் 15 ரன்னும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி சார்பில் பெர்மாள் 40 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடுத் தார். தவிர, ஜே. பிராவோ மற்றும் பெ ஸ்ட் தலா 2 விக்கெட்டும், நரீன் 1 விக் கெட்டும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி 212 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற எளிய இல க்கை ஜிம்பாப்வே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 46.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3 -வது மற்றும் கடைசி போட்டியில் மே.இ.தீவு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மே.இ.தீவு அணி தரப்பில் மிடில் ஆர்ட ர் பேட்ஸ்மேனான டிவைன் பிராவோ 103 பந்தில் 72 ரன்னை எடுத்து இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, பொவெல் 52 பந்தில் 42 ரன்னும், கேப்ட ன் ஜே. பிராவோ 25 ரன்னும், ராம்டின் 24  ரன்னும், டியோநரைன் 21 ரன்னும், சர்வான் 19 ரன்னும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில் முடோம் பாட்ஜி 35 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஜார்விஸ் மற்றும் மசகட்ஜா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை டிவைன் பிராவோ தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: