முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் அறிவாற்றலுக்கு கிடைத்த வெற்றி: முத்துமணி

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச். 1  - காவிரி இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிட்டது முதல்வர் ஜெயலலிதாவின் அறிவாற்றலுக்கு கிடைத்த இமாலய வெற்றி என்று முன்னாள் எம்.பி. முத்துமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததன் காரணமாக 1989 ம் ஆண்டு மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பித்தது. 

அப்போது இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி நரசிம்மராவ் அரசை எதிர்த்து துணிவோடு சென்னை கடற்கரையில் 4 நாள் உண்ணாவிரதம் இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. அப்போது மத்திய நீர்வளத் துறை அமைச்சர் வி.சி. சுக்லா நேரடியாக வந்து காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவை அமல்படுத்தும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டிய பின்புதான் முதல்வர் ஜெயலலிதா உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து 2007 ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. 

இந்த தீர்ப்பை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்து வந்ததோடு மத்திய அரசை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட விடாமல் காலம் தாழ்த்தி வந்த மத்திய அரசுடன்தான் தி.மு.க கூட்டணி வைத்திருந்தது. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் ஓட்டு வங்கிக்காக தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வந்தது. 

அதே போன்று கருணாநிதி தனது குடும்ப அரசியல் சுய லாபத்திற்காக காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை. காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் நிரந்தர துரோகம் இழைத்தவர் கருணாநிதி. ஆனால் தன்னம்பிக்கையில் இமயத்தின் இமயமாக விளங்கும் முதல்வர் ஜெயலலிதா துணிவோடு மத்திய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உரிய நேரத்தில் வழக்கு தொடுத்து வாதாடியதால்தான் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதாவின் அறிவாற்றாலும், கடின உழைப்பினாலும்தான் இந்த இமாலய வெற்றி தமிழக மக்களுக்கு கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் அனைத்து ஜீவாதார உரிமைகளையும் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா வென்றெடுக்க அவரது கரத்தை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago