முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலப்ப திருமணங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சிவகங்கை மார்.1 - அனைத்து சமுதாயப் பேரியக்கம் சார்பில் அனைத்து சமுதாயக கலந்தாய்வு கூட்டம் சிவகங்கை அலங்கார் மஹாலில் நடைபெற்றது. கலந்தாய்வு கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் ராமதாசு பேசியதாவது,

சிவகங்கை, ராமநாதபுரம் 28, 29வது மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல் முன்னதாக 27 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அடுத்ததாக புதுக்கோட்டை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் நடத்தப்படும். முதலில் 50 பேர் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் தற்போது அனைத்து சமுதாயத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  மேலும் இச்சட்டம் பழிவாங்குவதற்காகவும், இன சன்டையை தூண்டுவதற்காகவும், அதன் மூலம் பணம் பறிப்பதற்காகவும் சில தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். வன்கொடுமை சட்டத்தை முழுமையாக நாங்கள் மறுக்கவில்லை ஆனால் அதனை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். உதாரணமாக ஒருவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது முன்ஜாமின் கிடையாது அதை நீதிபதி கொண்ட குழு அமைத்து அந்த புகாரின் உண்மை நிலையை ஆராய்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேலையில் பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அதேபோல் சில தலைவர்கள் ஆலோசனையின் பேரில் தற்போது கலப்பு திருமணம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலரின் இந்த தவறான வழிகாட்டுதலாள் பெண்கள் கடத்தல் அதிகரித்து வருகிறது. கலப்பு திருமணத்தினால் ஜாதியை ஒழிக்க முடியாது. அதாவது பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே காதல் திருமணம் என்பது சம்பந்தபட்ட இரு குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி கல்லூரி படிப்பு முடிந்து பெண்களுக்கு 21 வயதிற்கு மேலும் ஆண்களுக்கு 23 வயதிற்கும் மேலும் பெற்றேரின் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணமே நிலைத்திருக்கும் என்பது எங்கள் கருத்து. விவேகானந்தர் போல் இளைஞர்களை உருவாக்க அனைத்து சமுதாயத் தலைவர்களும் முன் வரவேண்டும். அவர்களை தவறான வழிநடத்தலில் கொண்டு செல்லாமல் வன்முறையை தூண்டும் வண்ணம் அவர்கள் மனதில் தீய எண்ணங்கள் எலா வண்ணம்  ஒழுக்கமுள்ளவர்களாக உருவாக்க பாடுபடவேண்டும். நல்ல கல்வி, வன்முறையில்லாத அறவழி போராட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். ஜாதியின் பெயரால் வன்முறையில்லாத தமிழகத்தை உருவாக்க அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பாக பாடுபடுவோம் என்று அவர் கூறினார். கலந்தாய்வு கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மணி வரவேற்புரையாற்றினார். ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் அரசகுமார், நாகராஜ், தேவர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago