முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்று நோய் சிகிச்சை மையம்: முதல்வர் திறந்தார்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.2 - சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை மையம்  உள்பட ரூ.152 கோடி 52 லட்சத்தில் கட்டப்பட்ட 41 புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று (1.3.2013) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி மூலமாக  திறந்து வைத்தார்.  

மேலும், 135 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி புதிய வளாகக் கட்டடம், மகப்பேறு சிறப்பு மையம், மருத்துவக் கல்லூரிகளில் 6 கூடுதல் கட்டடங்கள், 16 ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 2 துணை இயக்குநர் அலுவலகக் கட்டடங்கள், நல்வாழ்வு மற்றும் குடும்பநலப் பயிற்சி மையம், 13 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்கள்.

தமிழக மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கும் வகையிலும், அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழவும், புதிய மருத்துவமனைகளை அமைப்பது மற்றும் மேம்படுத்துவது, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பது ஆகிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக 

17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை அடங்கிய புதிய புற்றுநோய் சிகிச்சை மையம்; சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 56 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 துறைகளுக்கு தேவையான புதிய வளாகக் கட்டடம்; சென்னை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் 16 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு சிறப்பு மையம்; மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளில் 36 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்; 

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர், செவிலியர் மற்றும் இதர பணியாளர்களுக்கு பயிற்சிகள் மற்றும் பணி அரங்குகள் நடத்திட 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எழும்ரில் கட்டப்பட்டுள்ள நல்வாழ்வு மற்றும் குடும்பநலப் பயிற்சி மையம்; 

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் 14 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நலப் பிரிவு; பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவு; திருப்ர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு; காங்கேயம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு; கரடிவாவி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு, புறநோயாளிகள் பிரிவு மற்றும் நவீன சமையல் கூடங்களுக்கான கட்டடங்கள்; கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவு; சிதம்பரம் அரசு வட்ட மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட உள்நோயாளி, புறநோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கு கட்டடங்கள்; தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அறுவை சிகிச்சைக்கு முந்தைய, பிந்தைய கவனிப்பு பிரிவு; விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கம்; விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவுகளுக்கான கட்டடங்கள்;

திருச்சிராப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகக் கட்டடங்கள்; விழுப்புரம் மாவட்டம் ​ கள்ளக்குறிச்சி, அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம்; திருவண்ணாமலை மாவட்டம் ​ அடி அண்ணாமலை, குளத்தூர் மற்றும் மங்களம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்; திருப்ர் மாவட்டம் ​ தாராபுரம், வடுகப்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்; சேலம் மாவட்டம் ​ தும்பல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்; நாகப்பட்டினம் மாவட்டம் ​ எடமணல் மற்றும் கீழையூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்;  விழுப்புரம் மாவட்டம் ​ கோலியனூர் மற்றும் மூங்கில்துறைப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள்; புதுக்கோட்டை மாவட்டம் ​ அத்தாணி, மலையூர் மற்றும் வல்லத்திரைக் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள்; தஞ்சாவூர் மாவட்டம் ​ பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பிரிவு, தலூர் மற்றும் சுவாமிமலை ஆரம்ப சுகாதார நிலையங்கள்;

ஆகிய 16 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 2 சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகக் கட்டடங்களுக்கு 4 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்;

என மொத்தம், 152 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 

41 புதிய கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்,  பொதுப்பணித் துறை அமைச்சர்,  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்