முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாசர்பாடியில் தீ விபத்து: 3 மூதாட்டிகள் பலி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.2 - கொடுங்கையூர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள குடிசைப் பகுதியில்  நேற்று முன்தினம் நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டிகள் மூன்று பேர் உயிரிழந்தனர். எருக்கஞ்சேரி, பாப்பாத்தி அம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்த 85 வயதான ராஜம்மாள், 76 வயதான சரோஜா, 53 வயதான மீனாட்சி ஆகியோர் தீ விபத்தில் பலியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி என்பவரது குடிசை உள்பட சுற்றிலும் இருந்த 9 குடிசைகள் தீயில் கருகின.

மீனாட்சி (53), சரோஜா(76), ராஜம்மாள் (85) ஆகியோர் குடிசைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் ஒருவர் மாற்றுத் திறனாளி. தீப் பற்றிய குடிசைகளில் இருந்து இவர்களால் வெளியே தப்பித்து வர முடியவில்லை. தீயில் சிக்கிக் கொண்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். திடீரென பற்றிய தீ அக்கம் பக்கத்து குடிசைகளில் மளமளவென பரவியது. இதுபற்றி வியாசர்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. 3 வண்டிகளில் வந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த விபத்தில் சில வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் வயது முதிர்ந்த மூன்று பெண்கள்   நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதில் மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொடுங்கையூர் போலீசார், விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். 

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்  டி.ஜி.வெங்கடேஷ்பாபு மற்றும் மாநகர மேயர், துணை மேயர், பாஸ்கரன் எம்.சி, பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன், ரமேஷ் எம்.சி, சரவணன் எம்.சி,  ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தனர்.

மேலும் தீயினால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு முதலுதவியாக பாய்  பெட்சீட், பிரட், டிபன், மாலை உணவு ஆகியவைகளை மாவட்ட  செயலாளரும், மேயரும் வழங்கினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்