முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகள் - கொள்முதல் நிலையம்: முதல்வர் திறந்தார்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.2 - ஆறு ரேஷன்  கடைக் கட்டிடங்கள், 9 கோடி கொள்முதல் நிலையங்கள் உள்பட ரூ.3 கோடி ரூ.5 லட்சத்தில் புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்தார். தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று (1.3.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் சென்னை, திருவேற்காட்டில் 4 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை காணொலிக் காட்சி  மூலமாக திறந்து வைத்தார். மேலும், 5 நியாய விலைக் கடைகளுக்கான புதிய கட்டடங்கள், 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 3 கிடங்குகள் மற்றும் உதவி ஆணையரக அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பொது மக்கள் நியாய விலைக் கடைகளை எளிதில் அணுகி பொருட்களை சிரமமின்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைய வேண்டுமென்பதில்   தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் சென்னை  திருவேற்காட்டில் ஒரு நியாய விலைக்கடையும், வில்லிவாக்கத்தில் 2 நியாய விலைக்கடைகளும், வியாசர்பாடியில் 3 நியாய விலைக்கடைகளும், என மொத்தம் 29 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சூரிய ஒளி வாங்கி வசதியுடன் கட்டப்பட்டுள்ள 6 நியாய விலைக்கடைகளுக்கான புதிய கட்டடங்கள்;

விவசாயிகள் அறுவடைக் காலங்களில் தாங்கள் விளைவித்த நெல்லை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டும், போதுமான அளவு நெல்லை பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்வதற்கும் ஏதுவாக தஞ்சாவூர் மாவட்டம் ​ வெட்டுவாக்கோட்டை, பள்ளத்தூர், ஆரலூர்; திருவாரூர் மாவட்டம் ​ கோட்டூர், அக்கரைகோட்டகம்; நாகப்பட்டினம் மாவட்டம் ​ கச்சநகரம், இளந்தோப்பு, சீயத்தமங்கை, அகரஓரத்தூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சூரிய ஒளி வாங்கி  வசதியுடன் கட்டப்பட்டுள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும்;

88 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை, ஆயிரம் விளக்கு மண்டல உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையரக அலுவலகக்  கட்டடம்;  

பொது விநியோக திட்டத்தில் விநியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் சேமித்து வைக்க, கிடங்கு வசதியினை அதிகரிக்கும் வகையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயத்தில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு மற்றும் சென்னை தங்கசாலையில்  60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள்; என மொத்தம் 3 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சர்,  உணவுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்  மேலாண்மை இயக்குநர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago