முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி மலைக்கோவில் உண்டியல் வசூல் ரூ.1.28 கோடி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, மார்ச். 2 - பழனி மலைக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை வழங்கும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், காணிக்கை வரவு ரூ. 1.28 கோடியை தாண்டியது. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் 20 நாள்களில்  நிறைந்தது.  இதைத் தொடர்ந்து உண்டியல் திறக்கப்பட்டு மலைக்கோயில்  கார்த்திகை  மண்டபத்தில் வைத்து எண்ணும் பணி நடைபெற்றது.  இதில் பக்தர்கள் காணிக்கையாக  செலுத்திய  பணம் ரூ. 1 கோடியே  28 லட்சத்து 63 ஆயிரத்து  173 கிடைத்தது.  மேலும், உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான  காசுகள், தாலி,  செயின், வேல், உருவங்களும்  வெள்ளியாலான வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். 

இதில், தங்கம் 811 கிராம்,வெள்ளி 4,140 கிராமும் கிடைத்துள்ளன. இவை தவிர மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை  உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள்  812 கிடைத்துள்ளன. உண்டியல்  எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், நாதஸ்வர, தவில் பள்ளி மாணவர்கள், 

இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் கூட்டுறவு வங்கி, சிட்டி யூனியன் வங்கி, தனலட்சுமி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்