முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்பும் உத்தரவுக்கு தடை

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், மார்ச். 2 - போதிய ஆவணங்களின்றி பிரிட்டனில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பும் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது பிரிட்டிஷ் நீதிமன்றம். ஆவணங்களின்றி வந்தாலும், அகதிகளாக பிரிட்டனில் வாழ தமிழருக்கு உரிமை உள்ளது, என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இனவெறியின் உச்சக்கட்டக் கொடுமைகள் ்ஈழத்தில் அரங்கேறின. இப்போதும் அது தொடர்ந்து கொண்டே உள்ளது. இலங்கையில் வாழ்ந்த தமிழர்களில் பல லட்சம் பேர், உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரம் மைல்கள் சிறு சிறு படகுகளில் பயணித்து கிடைக்கிற நாட்டில் தஞ்சமடைகின்றனர். பெரும்பாலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இப்படி கடல் வழியே படகில் போகும் தமிழர்களில் பலர் நடுக்கடலில் மடிந்து போவதும் நடக்கிறது. கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, கடல்வழியே பிரிட்டனுக்கு வந்த தமிழர்கள் மீது, தேவையான ஆவணங்கள் இன்றி வந்ததாக கைது செய்த போலீசார் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் நீதிமன்றம் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் என்று அப்போதே உத்தரவிட்டு விட்டது. 

இதை எதிர்த்து அங்குள்ள மனித உரிமை அமைப்புகளின் துணையுடன் தமிழர்கள் சிலர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டின் மீதான வழக்கு, நீதிபதி விக்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பும் உடனே வழங்கப்பட்டது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மோசமான கொடுமைகள் நடத்தப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இதைப் புறக்கணிக்க முடியாது. மேலும் இலங்கையின் நிலைமையைப் பார்க்கிற போது, அவர்களை அங்கு திருப்பி அனுப்புவதும் முறையல்ல. மனிதாபிமான அடிப்படையில், அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது. 

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அகதிகளாக, பிரிட்டனில் வாழ முழு உரிமை உள்ளது. தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து, இங்கு முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். போதுமான ஆவணம் இன்றி இருந்தவர்கள் நாடு கடத்தப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து இங்கேயே இருக்கலாம். பிரிட்டன் வரலாற்றிலேயே, இத்தகைய தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை என்பதை இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 60 தமிழர்கள் தனி விமானமொன்றில் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்தார்கள். இந்த நிலையில்தான் இந்த தீர்ப்பு வெளியானது. ஏற்கெனவே பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 15 தமிழர்கள், ராணுவம் மற்றும் போலீசின் கொடுமை தாங்காமல் மீண்டும் பிரிட்டனுக்கே தப்பி வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago