முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் 17 போலீசார் கொடூரமாக சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

காபூல், மார்ச். 2 - ஆப்கானிஸ்தானில் 17 போலீசாரை தலிபான்கள் கொடூரமான முறையில் கொன்றனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள காஜனி மாகாணம் தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. இங்குள்ள போலீஸ் முகாம் ஒன்றில் 2 தலிபான் தீவிரவாதிகள் போலீஸ் வேடத்தில் ஊடுருவினர். போலீசார் சாப்பிடும் சாப்பாட்டில் 2 தீவிரவாதிகளும் மயக்க மருந்து வைத்தனர். 

மருந்து கலந்த சாப்பாட்டை 17 போலீசார் சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் மயங்கியதும் 2 தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 17 பேரையும் கொன்றனர். இதற்கிடையில் போலீஸ் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் தெரியவந்ததையடுத்து முகாமை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. 

தப்ப முயன்ற 2 தீவிரவாதிகளையும் சுற்றி வளைத்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தலைநகர் காபூலில் ராணுவத்தினர் சென்ற பஸ்சை குறிவைத்து தற்கொலைப் படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் பஸ் சேதமடைந்தது. 6 ராணுவ வீரர்கள், பொதுமக்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். தலிபான் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களுக்கு ஆப்கன் அதிபர் ஹமீத் கசாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்