முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 கெய்லின் அதிரடி சதத்தால் பெங்களூர் அணி கொல்கத்தாவை எளிதாக வென்றது

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஏப். - 23  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் கொல்கத்தாவில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூர் அணியின் துவக்க வீரரான கெய்ல் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தில் ஷான் மற்றும் கோக்லி இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, எஸ். அரவிந்த் நன்கு பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெட்டோரி மற்றும் சையது மொகமது ஆகியோர் அவருக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், 24 -வது லீக் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. 

முன்னதாக இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. கொல்கத்தாஅணி தரப்பி ல், காலிஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹாடின் இருவ ரும் ஆட்டத்தை துவக்கினர். 

கொல்கத்தா நைட் அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு, 171 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரரும் அரை சதத்தை தாண்டவில்லை. ஆனால் 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

கேப்டன் காம்பீர் அதிகபட்சமாக 38 பந்தில் 48 ரன்னை எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர், அரவிந்த் வீசிய பந்தில் தில் ஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, யூசுப் பதான் 24 பந்தில் 46 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். துவக்க வீரர் காலிஸ் 42 பந்தில் 40 ரன்னை எடுத்தார். தவிர, ஹாடின் 11 பந்தில், 18 ரன்னை எடுத் தார். 

பெங்களூர் அணி தரப்பில், எஸ். அரவிந்த் 37 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, வெட்டோரி மற்றும் சையது மொகமது ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பொங்களூர் அணி 172 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொல்கத்தா அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அன்த அணி 18.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்னை எடுத்தது. 

இதனால் பெங்களூர் அணி இந்த லீக் ஆட்டத்தில், 11 பந்து மீதமிருக் கையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

பெங்களூர் அணி சார்பில், கெய்ல் அதிரடியாக ஆடி 55 பந்தில் 102 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். தவிர, தில் ஷான் மற்றும் கோக்லி இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

கொல்கத்தா அணி தரப்பில், பாலாஜி 43 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டமநாயகனாக காம்பீர் தேர் வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்