முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி அருகே பேருந்துகள் மோதல்: 4 மாணவிகள் பலி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி மார்ச்.2 - தருமபுரி பென்னாகரம் அருகே கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள் 35 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி பென்னாகரம் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதே போல் ஆட்டுகாரம்பட்டி அருகில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரி உள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஜெயம் பொறியில் கல்லூரி வாகனத்தில் மாணவிகளை ஏற்றிக்கொண்டு பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்துகொண்டிருந்தது. அதே போல் வெங்கடேஷ்வரா கல்லூரி பேருந்து தருமபுரியில்  இருந்து பென்னாகரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. தருமபுரி பென்னாகரம் சாலையில் பி.மல்லபுரம் என்ற இடத்தில் வரும்போது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில்  பென்னாகரம் அருகே தின்னூரை சேர்ந்த வெங்கடேஸ்வரா கல்லூரியில் பி.ஏ. லிட் படிக்கும்  ஸ்ரீதேவி(19) , அதே கல்லூரியில் பி.ஏ. லிட் படிக்கும் மாணவி பானுஸ்ரீ(20) இதில் பானுஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதே  தருமபுரி பகுதியை சேர்ந்த ஜெயம் பொறியியல் கல்லூரியை சேர்ந்த பி.இ. இறுதியாண்டு காயத்திரி(24) அதே கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவி குமுதா(22)  உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மேலும் காயமடைந்த 36 மாணவ மாணவிகள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 மாணவிகள் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கல்லூரி பேருந்தில் மாணவிகள் அனைவரும் முன்பகுதியிலும் மாணவர்கள் பேருந்தின் பின்புறத்திலும் அமர்ந்திருந்ததால் பெருமளவு சேதாரம் மாணவிகளுக்கு ஏற்பட்டது. 

இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு  தருமபுரி மாவட்ட கலெக்டர் லில்லி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராமர், கோட்டாட்சியர் சுப்ரமணி,  அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவித்தசாமி உட்பட பலர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்