முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, ஏப். - 23  - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 48 ரன் வித்தியாசத்தி ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது.  இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில் மார்ஷ் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். வல் தாட்டி, கில்கிறிஸ்ட், திணேஷ் கார்த்திக் ஆகியோர் அவருக்கு பக்க பலமாக ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, பிரவீன் குமார் மற்றும் பட் இருவரும் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்ற்றினர். தவிர, ஹாரி ஸ், சாவ்லா மற்றும் மெக்லாரன் ஆகியோர் அவர்களுக்கு பக்க பல மாக பந்து வீசினர். 

ஐ.பி.எல்.  டி - 20 கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் உள்ள பஞ் சாப் கிரிக்கெட் சங்க அரங்கத்தில் 23 - வது லீக் போட்டி நடந்தது. இதி ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பீல்டிங் கை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில், கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் வல்தாட்டி இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

பஞ்சாப் அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 195 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் எடுத்தனர். 

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான எஸ். இ. மார்ஷ் அதிகபட்சமாக 42 பந்தில் 71 ரன்னை எடுத்து அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார். அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சரை அடித்தார். இறுதியில் அவர் வாட்சன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, துவக்க வீரர் வல்தாட்டி 31 பந்தில் 46 ரன்னை எடுத் தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, கில்கிறிஸ்ட் 16 பந்தில் 28 ரன்னையும், கார்த்திக் 16 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஷா ன் டெய்ட் 22 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். வாட்சன் 24 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். தவிர, வார்னே 1 விக்கெட் எடுத்தார். 

ராஜஸ்தான் அணி 196 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்னை எடுத்தது. 

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 48 ரன் வித்தியாசத்தில் இந்த லீக் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், மெனோரியா அதிகபட்சமாக 26 பந்தில் 34 ரன்னை எடுத்தார். தவிர, பின்னி 24 பந்தில் 30 ரன்னையும், ரவுட் 24 பந்தில் 25 ரன்னையும், வாட்சன் 16 பந்தில் 24 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் அணி சார்பில், பிரவீன் குமார் 22 ரன்னைக் கொடுத்து 2 விக் கெட் எடுத்தார். பட் 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹாரிஸ், சாவ்லா மற்றும் மெக்லாரன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago