முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜியுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் கலிதாஜியா

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா:  மார்ச், - 4 - வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா திடீரென ரத்து செய்திருக்கிறார். வங்கதேசத்துக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா சந்திப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் கலிதா ஜியாவுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த சந்திப்பு ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்