முக்கிய செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் - பிரதமர்

Pm1 0

 

புதுடெல்லி, பிப். 22 -  பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நேற்று நிருபர்களுக்கு பிரதமர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக, மிக முக்கியமானது. இரு அவைகளிலும் நிதி நிலை அறிக்கை மீது விவாதம் நடந்து நிறைவேற்றப்பட உள்ளது. முக்கிய மசோதாக்கள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த கூட்டத்தொடர் சுமூகமாகவும் அமைதியாகவும் நடைபெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

நேற்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 16ம் தேதி வரையும் பின்னர் ஏப்ரல் 4ம் தேதி முதல் 21 ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்தும் பொருட்டு ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் சம்மதித்துள்ளார். இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: