இந்திய மருத்துவத்தின் தரம் குறைவாம் சொன்ன ஒபாமாவுக்கு கடும் கண்டனம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
obama 5

 

மும்பை,ஏப்.- 23 - இந்திய மருத்துவ சிகிச்சையின் தரம் மிகக் குறைவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியிருப்பதற்கு பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமாகாந்த் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஆசிய இதயவியல் கழகத்தின் தலைமை நிர்வாகியான ரமாகாந்த் பாண்டே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இதய அறுவைச் சிகிச்சை செய்தவர். ரூபாயை விட டாலரின் மதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கிறதே தவிர மருத்துவ சிகிச்சையின் தரத்தில் எந்த வித குறைபாடும் இல்லை. இந்திய டாக்டர்கள்  சர்வதேச தரத்திற்கு இணையாக சிகிச்சை தருவதிலும் நோயைக்கண்டறிவதிலும் வல்லவர்கள். 

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் 5 சதவீதம் பேர்தான் அமெரிக்கர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் அதிகம் பேர் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். ஒபாமா இவ்வாறு பேசினாலும் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வருவது குறையாது என்றார் பாண்டே. 

இதை ஷேர் செய்திடுங்கள்: