முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் மாதத்திற்குள் தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மார்ச். - 4 - தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கும் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டண நிர்ணயம் செய்யப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக விசாரணை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கட்டண நிர்ணய குழுவின் அலுவலகத்தில் தொடங்கியது. முதல் நாளில் சுமார் 100 தனியார் பள்ளிகளிடம் கட்டண உயர்வு தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட கேள்வி படிவங்கள் பெறப்பட்டன. அவர்கள் கோரும் கட்டண உயர்வு தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது. கட்டண நிர்ணய பணிகள் தொடர்பாக நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டண நிர்ணயத்துக்காக பள்ளிகளிடம் பல்வேறு தகவல்கள் கோரி கேள்வித் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர் விகிதம், வகுப்பறை வசதிகள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி, ஒரு மாணவருக்கு செலவிடும் தொகை, பள்ளியில் உள்ள நூலகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் பள்ளிகளுக்கு கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும்.
இதுவரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத 910 பள்ளிகளுக்கு இந்த முறை கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு 100 பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. நாளொன்றுக்கு 70 நர்சரி பள்ளிகள், 30 மெட்ரிக் பள்ளிகள் வீதம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளன. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து பள்ளிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முதல் பருவத்துக்குள் பள்ளிகளுக்கு புதிய கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago