முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவை மீட்க போராட்டம் ராமேசவரத்தில் மக்கள்விடுதலை கட்சியினர் 165பேர்கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,மார்ச். - 4 - கச்சத்தீவை மீட்ககோரி ராமேசுவரத்தில் கடலில் தேசியக்கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியினர் 165பேர் கைது செய்யப்பட்டனர்.  ராமேசுவரத்தில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் நிறுவனர் முருகவேல்ராஜன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். இவர்கள் கடலுக்குள் செல்ல போலீஸ்நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இதனை மீறி முருகவேல்ராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் வையமுத்து, மாநில துணை தலைவர் வீரஜோதிராஜன், ஆதிதமிழர் மக்கள் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கச்சத்தீவுக்கு செல்வோம் என்று கூறி தேசியகொடியுடன் கடலில் இறங்கினர். இதைத்தொடர்ந்து ராமேசுவரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீசார் 165 பேரை கைது செய்தனர். அப்போது மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும். இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவை போர்ககுற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இந்தியாவால் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் வாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்