முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி திருவள்ளுவர் சிலையில் சாரம்அமைக்கும் பணி தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

குமரி, மார்ச். - 4 - கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூச்சு பூசுவதற்காக இரும்புக் கம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்புக் காற்றால் சேதமடையாமல் இருப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலீசிலிக்கான் எனும் ரசாயன கலவை பூச்சு பூசப்படுவது வழக்கம். சிலை அமைக்கப்பட்ட பின்னர் 3 வது முறையாக ரசாயன கலவை பூசும் பணி நடைபெறவுள்ளது. இதற்கான பணியின் முதல் கட்டமாக இரும்புக் கம்பிகள் தனிப்படகு மூலம் சிலை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சாரம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முழுப் பணிகளும் முடியும் வரை திருவள்ளுவர் சிலைக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்