முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹைதராபாத் டெஸ்ட்: திடீர் டிக்ளேர் செய்த கிளார்க்கின் முடிவு துணிச்சலானது: கவாஸ்கர்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

ஹைதராபாத்: மார்ச், - 4 - ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கிளார்க்கின் முடிவு துணிச்சலானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். ஹைதராபாத் டெஸ்ட்டில் விக்கெட் கையில் வைத்திருந்த நிலையில் குறைவான ரன்கள் எடுத்த போதும் ஆஸ்திரேலியா திடீரென டிக்ளேர் அறிவிப்பு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில், கிளார்க்கின் இந்த முடிவு நல்ல தந்திரமாக இருக்கும் என்று நான் உணர்கிறேன். இது துணிச்சலான முடிவு. கடைசி விக்கெட் ஜோடி நீடிக்காது என்பதை அவர் தெரிந்து இருப்பார். இதனால் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 237 ரன்னில் டிக்ளேர் செய்யும் முடிவை எடுத்து இருக்கிறார். மேலும் எஞ்சிய சில ஓவர்களில் இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் என்ற விருப்பத்தில் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டீன்ஜோன்ஸ், இந்திய பவுலர்கள் புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா ஆகியோரை பாராட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்