முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் டென்னிஸ்: பூபதி ஜோடி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

துபாய், மார்ச். - 4 - டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பிரான்ஸின் மைக்கேல் வேட்ரா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.  துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தின் போது மகேஷ் பூபதி, மைக்கேல் லோட்ரா ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ராபெர்ட்டா வின்ஸ்டெட் செர்பியாவின் நீளாட் ஜிமோன்ஜிக் ஜோடியை வீழ்த்தியது. 

துபாய் டென்னிஸ் போட்டியில் மகேஷ் பூபதி வெல்லும் 5 வது சாம்பியன் பட்டம் இது. 1998 ம் ஆண்டு லியாண்டர் பயஸூடன் இணைந்து முதல் பட்டத்தை கைப்பற்றிய மகேஷ் பூபதி அதன் பிறகு 2004 ம் ஆண்டு பிரான்சின் பேப்ரைஸ் சன்டோராவுடனும், 2008 ல் பஹாமாஸின் மார்க் நோவல்ஸூடனும், கடந்த ஆண்டு இந்தியாவின் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் மகேஷ்பூபதி வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்