முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ ஓபன்: நடால் சாம்பியன்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மெக்ஸிகோ, மார்ச். 5 - மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 

மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடால் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீரரான டேவிட் பெரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மெக்ஸிகோ ஓபனில் நடால் வென்ற 2 வது பட்டம் இது. மேலும் மெக்ஸிகோ ஓபனில் தொடர்ந்து 4 வது முறையாக பட்டம் வெல்லும் பெரரின் கனவையும் தகர்த்தார் நடால். 

இதுவரை டேவிட் பெரருடன் 21 முறை மோதியுள்ள நடாலுக்கு இது 17 வது வெற்றியாகும். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய நடால், இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் பிரிவில் இதுத்தாலியின் சாரா எர்ராணி சாம்பியன் பட்டம் வென்றார். அவர் இறுதி ஆட்டத்தில் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்லா சுரேஜை வீழ்த்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்