முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

188 முறை போர் நிறுத்தத்தை மீறி பாக்., அட்டூழியம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 5 - 2010 முதல் 2012 வரை 188 முறை பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி அட்டூழியம் புரிந்துள்ளது என்று லோக் சபாவில் மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டை கடந்து, 188 முறை பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதற்குத் தகுந்த ஆதாரம் உள்ளது. மேலும் அந்த காலகட்டத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் லோக் சபாவில் மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார். இதுபற்றி எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி அட்டூழியம் புரிந்துள்ளதை இந்தியா ஆட்சேபித்துள்ளது. 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் 44 முறை இந்தியாவுடனான போர் நிறுத்த உடன்பாட்டை மீறியுள்ளது. 2011-ம் ஆண்டு இது 51 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2012-ம் ஆண்டு 93 முறை பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது.

2010-ம் ஆண்டில் ராணுவ அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். 2012-ல் ஒரு முறை உடன்பாட்டை மீறியுள்ளது. 2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை  போர் நிறுத்தத்தை மீறியதன் மூலம் 16 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சு வார்த்தை, ரகசிய கூட்டம் போன்றவை மூலம்   பாகிஸ்தான் ராணுவம் சரியான நேரத்தில் எல்லா போர் நிறுத்தங்களையும் மீறியுள்ளது என்று ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்