முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரிய ராணுவ தாக்குதலில் 20 தீவிரவாதிகள் சாவு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

அபுஜா, மார்ச்.5 - நைஜீரியாவில்  ராணுவத்தினர்  மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத  இயக்கமான  போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த 20 பேரை ராணுவத்தினர்  கொன்றனர். போர்னோ பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் குடியிருப்பின் மீது பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) தாக்குதல் நடத்தியதாக  ராணுவ செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார். 3 லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கும்பலாக வந்த தீவிரவாதிகள் இத்தாக்குதலில்  ஈடுபட்டனர். தாக்குதலுக்கு ராக்கெட்  லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்