முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத் டெஸ்ட்: இந்தியா 503 ரன் குவிப்பு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மார்ச். 5 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐதரா பாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெ ஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 503 ரன்னைக் குவித்து ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் இன்னிங்சில் புஜா ரா இரட்டை சதம் அடித்தது ஆட்டத்தி ன் சிறப்பம்சமாகும். புஜாரா மற்றும் விஜய் ஆகியோரது ஆட்டத்தால் இந் திய அணி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. 

புஜாரா மற்றும் விஜய் இருவரும் இணைந்து 2 - வது விக்கெட்டிற்கு 371 ரன்னைச் சேர்த்து புதிய சாதனை படை த்துள்ளனர். இதன் மூலம் 34 வருடமாக இருந்த சாதனையை முறியடித்துள்ளனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜா ரா இந்திய அணியின் புதிய ரன் மெஷி னாக உருவாகியுள்ளார். அவருக்கு இது இரண்டாவது இரட்டை சதமாகும்.  

ஆஸ்திரேலிய அணி சார்பில், அறிமுக ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், டொகெர்டி 3 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான பார்டர் மற்றும் கவாஸ்கர் கோப்பைக்கான 2-வது டெ ஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 237 ரன்னி ல் ஆட்டம் இழந்தது. அந்த அணி தரப் பில் கேப்டன் கிளார்க் 91 ரன்னும், கீப் பர் வாடே 62 ரன்னும், வாட்சன் 23 ரன் னும் எடுத்தனர். 

பின்பு களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடி பிர மாண்டமான ஸ்கோரை எடுத்தது. இறுதியில் இந்திய அணி 154.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 503 ரன்னைக் குவித்தது. 

இந்திய அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா இரட்டை சத ம் அடித்தார். அவர் 341 பந்தில் 203 ரன் எடுத்தார். இதில் 30 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பட்டின்சன் வீசிய பந்தில் டொகெர்டியிட ம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அவருக்கு பக்கபலமாக ஆடிய தமிழக வீரர் விஜய் 361 பந்தில் 167 ரன் எடுத்தா ர். இதில் 23 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் மேக்ஸ்வெ ல் வீசிய பந்தில் கோவனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். டெஸ்ட் போட்டியில் இது விஜயின் அதி கபட்ச ஸ்கோராகும். 

புஜாரா மற்றும் விஜய் இருவரும் இணைந்து 2 -வது விக்கெட்டிற்கு 371 ரன் சேர்த்து புதிய சாதனை படைத்து உள்ளனர். இதன் மூலம் 34 வருட சாத னையை முறியடித்துள்ளனர். 

இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் (182) மற்றும் திலீப் வெங்க்சர்க்கார்(157) இரு வரும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 344 ரன் சேர்த்ததே சாதனையாக இருந் தது. 1978-ம் வருடம் கொல்கத்தாவில் மே.இ.தீவு அணிக்கு எதிராக இந்த சாத னையை அவர்கள் படைத்தனர். 

புஜாரா மற்றும் விஜய் ஜோடி ஆட்டம் இழந்ததும் பின்பு களம் இறங்கிய வீரர் கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. கோக்லி 92 பந்தில் 34 ரன்னையும், கே ப்டன் தோனி 43 பந்தில் 44 ரன்னையும்,  எடுத்தனர். 

முன்னதாக இந்திய அணி 2 -வது நாள் ஆட்டநேர முடிவில், 93 ஓவரில் 1 விக் கெட் இழப்பிற்கு 311 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது புஜாரா 162 ரன் னையும், விஜய் 129 ரன்னையும் எடுத்து இருந்தனர். 

நேற்று 3 -வது நாள் ஆட்டத்தைத் தொ டர்ந்த இந்திய அணி அனைத்து விக்கெ ட்டையும் இழந்து 503 ரன்னை எடுத்த து. கடைசி 6 விக்கெட்டுகள் 43 ரன்னிற் கு விழுந்தன. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், மேக்ஸ்வெல் 124 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். டொகெர்டி 131 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, பட்டின்சன் 2 விக்கெட்டும், சிட்லே 1 விக்கெட்டும் எடுத்தனர். 

பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ் திரேலிய அணி ஆட்டநேர முடிவில், 32 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன் னை எடுத்து இருந்தது. கோவன் 26 ரன் னுடனும், வாட்சன் 9 ரன்னுடனும் கள த்தில் இருந்தனர். 

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாள ரான அஸ்வின் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்திய அணி தற் போது 192 ரன் முன்னிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago