பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா காலமானார்

March 5, 2013 சினிமா

 

சென்னை, மார்ச்.6 - தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா நேற்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.  கடந்த சில நாட்களாக சிறுநீnullரகம் மற்றும் இதய கோளாரால் கோளாறால் அவதிப்பட்ட ராஜசுலோசனா, சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராததால் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் காலமானார். 

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெருமைமிக்க நடிகர்களான மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், தெலுங்கில் என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என பலருடன் நடித்தவர் ராஜசுலோசனா.

1935​-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த விஜயவாடாவில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது சென்னை. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார்.

1953​ல் அவர் நடித்த முதல் படம் குணசுந்தரி வெளியானது. தொடர்ந்து சத்யஜோதி  ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், குலேபகாவலி படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

குறிப்பாக கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்... பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா... என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வில்லி வேடம் பெரிதும் பேசப்பட்டது இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 350 படங்கள் வரை நடித்தவர் ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார்.

புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி அதன் மூலம் நடனம் கற்றுக்கொடுத்தார். பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் சி.எஸ்.ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர்.  ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நடிகைகள் கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சகுந்தலா, வியட்நாம் வீடு சுந்தரம், என பலர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் ஒரு மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள மின்சார மயானத்தில் ராஜசுலோசனா உடல் தகனம் செய்யப்படுகிறது.

சென்ற வாரம்

சென்ட்ரல் குண்டு வெடிப்பில் 6 சிமி இயக்க தீவிரவாதிகளூக்கு தொடர்பு

சென்னை - நிலையில் சென்ட்ரல் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிமி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் என சி.பி.சி.ஐ.டி. ...

இலங்கை தேர்தல்: ராஜபக்சேவை எதிர்த்து அமைச்சர் போட்டி

கொழும்பு - இலங்கை சுகாதார துறை அமைச்சர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா, ஆளும் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே ஆளும் கூட்டணியில் இருந்து அந்த நாட்டின் தேசிய பாரம்பரிய கட்சி விலகியுள்ளது. ...

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் குறைகள் தீரும்!

இறைவன், மண், நீர், தீ , காற்று, வானம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற அட்ட மூர்த்தங்களாக விளங்குகிறான். ...

ஒபாமா இந்திய பயணத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் வரவேற்பு

வாஷிங்டன் - ஒபாமா இந்திய பயணத்தை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு ...

விமான நிலைய கழிவறையில் 2 கிலோ தங்கக்கட்டிகள்!

திருச்சி - திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் அறைக்கு அருகில் உள்ள ஆண்கள் கழிவறையை ...

அணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகெரியா

சியோல் - தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா ...

ரூ.1000 கோடி பங்குகள் ஏலம்: அரசு அறிவிப்பு

சென்னை - மொத்தம் ரூபாய் 1500.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் ...

சாமியார் ராம்பாலிடம் போலீஸ் 5 நாள் விசாரணை

சண்டிகர் - ஹரியாணா சாமியார் ராம்பாலுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணையை ...

பாட்மிண்டன் தரவரிசை 10-வது இடத்தில் ஸ்ரீகாந்த்

புது டெல்லி - சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் தனது அதிகபட்ச தரவரிசையை தொட்டிருக்கிறார். 21 வயதான ஸ்ரீகாந்த் சமீபத்தில் நடைபெற்ற சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ...

காதல் திருமணம் செய்த மாணவி கவுரவ கொலை

புது டெல்லி - காதல் திருமணம் செய்து கொண்ட மகளைக் கவுரவக் கொலை செய்த பெற்றோரை டெல்லி போலீசார் கைது ...