முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா காலமானார்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.6 - தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா நேற்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.  கடந்த சில நாட்களாக சிறுநீnullரகம் மற்றும் இதய கோளாரால் கோளாறால் அவதிப்பட்ட ராஜசுலோசனா, சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராததால் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் காலமானார். 

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பெருமைமிக்க நடிகர்களான மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், தெலுங்கில் என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என பலருடன் நடித்தவர் ராஜசுலோசனா.

1935​-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த விஜயவாடாவில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது சென்னை. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார்.

1953​ல் அவர் நடித்த முதல் படம் குணசுந்தரி வெளியானது. தொடர்ந்து சத்யஜோதி  ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், குலேபகாவலி படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

குறிப்பாக கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்... பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா... என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வில்லி வேடம் பெரிதும் பேசப்பட்டது இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 350 படங்கள் வரை நடித்தவர் ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார்.

புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி அதன் மூலம் நடனம் கற்றுக்கொடுத்தார். பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் சி.எஸ்.ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர்.  ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நடிகைகள் கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சகுந்தலா, வியட்நாம் வீடு சுந்தரம், என பலர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் ஒரு மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள மின்சார மயானத்தில் ராஜசுலோசனா உடல் தகனம் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago