முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சே போர்குற்றவாளி என அறிவித்தவர் முதல்வர்தான்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

கோபி,மார்ச்.6 - ராஜபக்சேவை  போர்குற்றவாளி  என்று பகிரங்கமாக அறிவித்த ஒரே தலைவர்  முதலமைச்சர் அம்மாதான் என்று கோபியில் நடந்த இலக்கிய அணி  கூட்டத்தில்  கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ  பேசினார். ஈரோடு  புறநகர் மாவட்ட கழக இலக்கிய அணி சார்பில் கோபி பஸ்நிலையத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து,  விளக்க உரை கூட்டம் நடந்தது. இதில்,  கழக இலக்கிய அணி தலைமை  கழக பேச்சாளர் கோபி காளிதாஸ்  தலைமை  வகித்தார். இதில் கலந்து கொண்டு  பஸ் நிலையம்  பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பஸ்  பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

தமிழக முதல்வர் அம்மாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி  தமிழகமெங்கும்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுக வின் ஆற்றல் மிக்க சக்தியாக அம்மா விளங்கிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு பின்னால் இந்த இயக்கம் உள்ளது. கடந்த 30 ஆண்டு  காலமாக போராடி  வந்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசு கெஜட்டில் வெளியிட செய்து, சரித்திர சாதனை புரிந்து, விவசாயிகளின்   வயிற்றில்  பாலை  வார்த்துள்ள“ர்.  ஆட்சி பொறுப்பேற்ற 20 மாதங்களில் நாட்டு மக்களின் அடிப்படை ஜீவாதார  பிரச்னைகளை மனதில் வைத்து, திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய  அரசின் அரசிதழில் வெளியிட்ட பெருமையோடு,  வறண்டு கிடந்த 5 மாவட்டங்களில் கருகிய பயிர்களை காப்பாற்ற, குடிநீர் தேவையை நிறைவேற்ற 419 டிஎம்சி நீரை கர்நாடகாவில் இருந்து  பெற்றுத்தந்த  தாய்தான் அம்மா. தமிழக முதல்வர் அம்மா  எந்த காரியத்தை  எடுத்துக்கொண்டாலும்  வெற்றிக்கனியோடுதான் திரும்பி வருவார்.  இலங்கையில் அப்பாவி தமிழர்கள்  84 ஆயிரம் பேர்களை கொன்று குவித்த கொலையாளி ராஜபக்சேவை  போர் குற்றவாளி என்று பகிரங்கமாக அறிவித்த ஒரே தலைவர் அம்மாதான்.  அது மட்டும் அல்ல, இலங்கைக்கு  பொருள“தார  தடை விதிக்க   வேண்டும்  என்று  அறிவித்த தலைவியும் அம்மாதான்.  வருங்காலத்தில் அம்மா பிரதமராக வருவது உறுதி. மத்தியில் அம்மா பிரதமராக  வந்த பிறகு  உலக நாடுகளே  வியக்கும் வண்ணம் ஆட்சி செய்வார்.  ஆகவே அம்மாவின் 20 மாதகால ஆட்சியில் 20 ஆண்டுகால சாதனையை  நிறைவேற்றி உள்ள“ர். இதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து  வரும்  பாராளுமன்றதேர்தலில் 40 -க்கு 40 தொகுதிகளையும்,  வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ  பேசினார்.  

நிகழ்ச்சியில் அமைச்சர்  தோப்பு வெங்கடாசலம், முன்னாள் சிட்கோ வாரிய தலைவர்  சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி.காளியப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வம்,  முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.கருப்பண்ணன்,கந்தசாமி, நகராட்சி  தலைவர் ரேவதிதேவி,  ஊராட்சி  தலைவர்  சத்தியபாமாவாசு,  ஒன்றிய செயலாளர்கள்  சிறுவலூர்  மனோகரன்,  தம்பி(எ) சுப்பிரமணியம், நகர செயலாளர் காளியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரினியோ கணேஷ்,  நகர்மன்ற துணைத்தலைவர் செல்வராஜ்,  முன்னாள் சேர்மன்  கந்தவேல்முருகன்,  ஒன்றிய குழு உறுப்பினர் வேலுமணி மற்றும் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்