முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மேலும் 34 மலிவு விலை உணவகங்கள் துவக்கம்

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - சென்னையில் நேற்று 34 இடங்களில் மலிவுவிலை உணவகங்களை அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் டி.கே.எம்.சின்னைய்யா ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னையில் நேற்று வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம், ராயப்பேட்டை உட்பட மேலும் 34 இடங்களில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்பட்டன. 

இந்த உணவகங்களை கே.பி.முனுசாமி, டி.கே.எம்.சின்னைய்யா மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பார்வையிட்டனர். இதுவரை சென்னையில் 73 வார்டுகளில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதாமாநகரில் உள்ள ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன் பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டத்தை 19.2.2013 அன்று சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 15 மலிவு விலை சிற்றுண்டி உணவகத்தை துவக்கி வைத்தார். 

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும்,சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன் பெறும் வகையில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக சிற்றுண்டி உணவகங்கள் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு 24.2.2013 அன்று 24 மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்பட்டது. 

அதன் தொடர் நடவடிக்கையாக நேற்று மண்டலம்-1, வார்டு-1, கத்திவாக்கம் நெடுஞ்சாலை, தாழக்குப்பம், மண்டலம்-2, வார்டு-21, பாடசாலை தெரு, மணலி, மண்டலம்- 3, வார்டு- 31, முத்துமாரியம்மன் கோயில் தெரு, மாதவரம் மண்டலம்- 4, வார்டு- 45, மேயர் கிருஷ்ணமூர்த்திநகர், வியாசர்பாடி, வார்டு- 47,4 வது தெரு, மீனாம்பாள் நகர், கொருக்குப்பேட்டை, மண்டலம்-5, வார்டு- 49, சிங்கார தோட்டம் 4 வது தெரு, வார்டு- 51, பழைய வண்ணாரப்பேட்டை, வார்டு-62, மேற்குகூவம் சாலை, சிந்தாதிரிப்பேட்டை, வார்டு- 63, பாரதி சாலை, ராயப்பேட்டை, மண்டலம்- 6, வார்டு- 76, சச்சிதானந்தம்தெரு, கொசப்பேட்டை, வார்டு- 77, கே.பி.பார்க், புளியந்தோப்பு, வார்டு- 78, குரவன் குளம், சூளை, மண்டலம்- 7, வார்டு- 81, தெற்கு பூங்காதெரு, வெங்கடாபுரம், அம்பத்தூர், மண்டலம்-8, வார்டு- 101, கே.பிளாக், 2வது பிரதான சாலை, அண்ணாநகர் (கிழக்கு) வார்டு- 102, சிமெட்ரி சாலை, கீழ்ப்பாக்கம், வார்டு- 108, எம்.எம்.டி.ஏ.காலனி, மண்டலம்-9, வார்டு-118, சீனிவாச பெருமாள் சன்னதி 2 வது தெரு, கோபாலபுரம், வார்டு- 119,பேஹம் சாகிப் 5 வது தெரு, ராயப்பேட்டை, வார்டு- 124,சாரதாபுரம்,மண்டலம்- 10, வார்டு- 135, பிருந்தாவன் தெரு, மேற்கு மாம்பலம், வார்டு-137, 10 வதுசெக்டர், கே.கே.நகர், வார்டு- 138, அய்யாவு தெரு, மேற்கு ஜாபர்கான்பேட்டை, வார்டு- 139, ஆர்.ஆர்.காலனி 2 வது தெரு, ஜாபர்கான்பேட்டை, மண்டலம்- 11, வார்டு-143, 4 வது பிரதான சாலை, நொளம்பூர், வார்டு- 151, ஆஞ்சநேயர் கோயில் தெரு, போரூர், வார்டு- 155, பஜனைகோயில் தெரு, ராமாபுரம், மண்டலம்- 12, வார்டு- 156, முகலிவாக்கம், வார்டு-160, புதுதெரு, ஆலந்தூர், மண்டலம்- 13, வார்டு- 177, ஐ.சி.டி.எஸ். கட்டடம், மேற்கு வேளச்சேரி,

வார்டு-178, வேளச்சேரி பிரதானசாலை, மண்டலம்- 14, வார்டு- 188, மடிப்பாக்கம் பஸ் டெர்மினஸ், வார்டு- 191, ரைஸ் மில் சாலை, ஜல்லடம்பேட்டை, மண்டலம்- 15, வார்டு-196,ஈஞ்சம்பாக்கம், வார்டு- 199, நைனார் குப்பம், உத்தண்டி ஆகிய 34 மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.கே.எம்.சின்னைய்யா,மேயர் சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் புதிதாக திறக்கப்பட்ட இடங்களில் திறக்கப்பட்டுள்ள மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை பார்வையிட்டனர். சென்னை மாநகராட்சியின் சார்பில் 73 வார்டுகளில் மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளது. இம்மலிவு விலை சிற்றுண்டி உணவகங்கள் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago