முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் - மக்கள் நலனில் தமிழகமே சிறந்தது: ஆய்வு தகவல்

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - பெண்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் குறித்து அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாடு பெண்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனில் முதன்மையாக திகழும் இந்தியாவின் முதல் 10 மாநிலங்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. டாட்டா செயல்திட்ட மேலாண்மை குழுவால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில்  மக்களின் நலம் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டன. 

இதில் மக்களின் நலனை நிர்ணயிக்கும் குறியீடுகளாக அவர்களின் வீடு, சமையலறை, சுகாதாரம், பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை கருதப்பட்டன. 

அந்த விதத்தில் மக்களின் வாழ்க்கை தரம் படிப்படியாக பஞ்சாப், டெல்லி, ஹிமாச்சல் பிரதேஷ், ஹரியானா போன்ற மாநிலங்களில் மேம்படுவது தெரியவந்துள்ளது. மக்கள் நலனில் சிறந்து விளங்கும் மாவட்டங்களாக மும்பை, சென்னை, ஹரித்துவார் மற்றும் கொல்கத்தா திகழ்கின்றன. இந்தியாவில் மக்கள் நலனில் சிறந்து விளங்கும் 20 மாவட்டங்களில் மாஹே மற்றும் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டங்கள் இடம் பிடித்திருக்கின்றன. 

இதேபோல் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குறியீடுகளாக ஆண்- பெண் பிறப்பு விகிதத்தில் வேறுபாடு, வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட மரணங்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவை கருதப்பட்டன. 

இந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலங்களாக திகழ்பவை குஜராத், தமிழ்நாடு, தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். மக்கள் நலனில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் சட்டீஸ்கர், ஜார்கந்த், அஸ்ஸாம் ஆகியவை. பெண்கள் பாதுகாப்பில் பின்தங்கியிருப்பவை டெல்லி, மத்திய பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, உத்தர்பிரதேஷ் ஆகிய மாநிலங்கள். 

மக்கள் நலனில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பெண்கள் பாதுகாப்பில் பின்தங்கியுள்ளன. அதேபோல் பெண்கள் பாதுகாப்பில் முன்னிலையிலுள்ள மாநிலங்கள் மக்கள் நலனில் பின்தங்கியுள்ளன. ஆனால், மக்கள் நல குறியீட்டிலும், பெண்கள் பாதுகாப்பு குறியீட்டிலும் சிறந்த இடத்தை பெற்று, இந்தியாவின் முதல் 10 மாநிலங்களில் தமிழ்நாடு இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்