முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிவாயு குழாய் விவகாரம்: விவசாயிகளிடம் கருத்து கேட்பு

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினை தொடர்பாக கோவை மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், நில உரிமையாளர்களிடம் தமிழக அரசின் தலைமை செயலாளர் நேற்று மாலை சென்னையில் கருத்து கேட்டார்.

கொச்சி- கோவை- சேலம் வழியாக பெங்களூர் வரை எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் இந்தியா என்ற மத்திய அரசு நிறுவனம் கடந்த ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்துக்கான குழாய்களை பதிக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில்தொடங்கியது. 

தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் இடம் பெரும்பாலும் விவசாய நிலங்களாக உள்ளது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று கோவை, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த பிரச்சினை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் மூன்று நாள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். இதில் 7 மாவட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் பிரச்சினைகளை கூறலாம். கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் பற்றி எனது தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்  என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.   

அதன்படி நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலைய கூட்ட அரங்கில் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் 2.30 மணிக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று கருத்து தெரிவித்தார்கள். இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், நாளை தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் பங்கேற்கிறார்கள். 

தலைமை செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள் கூட்டத்தில் தெரிவிக்கும் கருத்துக்கள், ஆலோசனைகள் பற்றி முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்படும். இதையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago