முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் இன்று டெசோ மாநாடு

புதன்கிழமை, 6 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.7 - மனித உரிமைகளை மீறிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும், ஈழத்தமிழர் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் டெசோ அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. 

அகில இந்திய அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்று ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லியில் இன்று (7-ந் தேதி) டெசோ மாநாடு கருத்தரங்கு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் மற்றும் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கும், மனிதநேய அமைப்புகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. 

டெசோ மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 6.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா, தயாநிதி மாறன் எம்.பி., சுகவனம் எம்.பி. ஆகியோரும் சென்றனர். 

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் நாளை (இன்று) நடைபெறும் டெசோ மாநாட்டில் சர்வதேச அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம். அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்