முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேயை காப்பாற்ற சுப்பிரமணியசாமி அமெரிக்கா பயணம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.7 - ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசர பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வாஷிங்டனில் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தினார். சுப்பிரமணியசாமியின் பூர்வீகம் மதுரை அருகேயுள்ள சோழவந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழும் சரியாக தெரியாது. தமிழர்களின் உணர்வும் துல்லியமாக புரியாது. உணர்வார்ந்த தமிழர்கள் சுப்பிரமணியசாமியை தமிழினத் துரோகியாகவே கருதுகிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். குறிப்பாக பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்து வைத்து சுட்டுக்கொன்றதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்காதவர்களே இல்லை. இந்நிலையில் சுப்பிரமணியசாமி இலங்கைக்கு சென்று அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேயை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் மன்றக்கூட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 47 நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க முன்வரும் நிலையில் இதை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்பது குறித்து ராஜபக்சேவும், சுப்பிரமணியசாமியும் கலந்து பல்வேறு கோணங்களில் உரையாடியுள்ளனர். மேலும் ராஜபக்சேயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சுப்பிரமணியசாமி அவசரமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச்சென்றார். நியூயார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்தில் இறங்கிய அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பிறகு அமெரிக்கா தலைநகரான வாஷிங்டன் சென்று உயர் அதிகாரிகளுடன் சுப்பிரமணியசாமி ஆலோசனை நடத்தினார். சுப்பிரமணியசாமியின் தரகு வேலை பலிக்குமா என்பது விரைவில் தெரியவரும். இதற்கிடையே சுப்பிரமணியசாமியின் இந்த செயல் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago