முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசிடம் இருந்து நாட்டை மீட்டு தருவார் முதல்வர்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், மார்ச். 7 - தனது 66 வது பிறந்த நாளில் காங்கிரசிடம் இருந்து இந்தியாவை ஜெயலலிதா மீட்டுத் தருவார் என்று நாஞ்சில் சம்பத் பேசினார். மேலூரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு சாமி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி வெற்றிச்செழியன், தொகுதி செயலாளர் பெரியபுள்ளான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலூர் நகர்மன்ற தலைவர் சரவணன் வரவேற்றார். இதில் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தமிழரசன் எம்.எல்.ஏ, தலைமை கழக பேச்சாளர் டேவிட் அண்ணாதுரை, கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசினர். அப்போது நாஞ்சில் சம்பத் பேசியதாவது, 

தமிழக முதல்வரின் தனித்தன்மை, ஆற்றல் இந்திய அரசியலில் யாருக்கும் வராது. காவிரியை எல்லோரும் தாய் என்பார்கள். அந்த தாயை இந்த தாய் வந்தால்தான் கொண்டு வர முடியும். 64 வது பிறந்த நாளில் கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை காத்தார். 65 வது பிறந்த நாளில் காவிரியை மீட்டுத் தந்தார். 66 வது பிறந்த நாள் விழாவில் காங்கிரசிடம் இருந்து இந்தியாவை மீட்டு தருவார். எனவே முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க எல்லோரும் பாடுபடுவோம். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து செங்கோட்டையில் ஜெயலலிதா அமர்வது உறுதி. இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago