முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய கடன் தள்ளுபடியில் முறைகேடு நடக்கவில்லை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். நாட்டில் பருவகாலம் அடிக்கடி மாறுவதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கியில் வாங்கிய கடன்கள் ரூ.52 ஆயிரம் கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து வங்கிகளில் மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்தது. ஆய்வு செய்து அதன் விபரம் அடங்கிய அறிக்கை ஒன்றை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தணிக்கை குழு தாக்கல் செய்தது. அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்ததில் தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் தகுதியுள்ள விவசாயிகள் ஏராளமானோருக்கு கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை வங்கிகள் இன்னும் வழங்காமல் இருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்றார். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விபரத்தை மத்திய கணக்கு தணிக்கைக்குழு மேலும் விரிவான முறையில் ஆய்வு செய்து உண்மையான விபரத்தை வெளியிட வேண்டும். தணிக்கை குழுவானது குறைந்த அளவிலான விவசாயிகளின் வங்கிக்கடன் தள்ளுபடி கணக்கை மட்டுமே ஆய்வு செய்துள்ளது. அதிகப்பட்ச அளவில் விவசாயிகளின் வங்கி கடன் கணக்குகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். 

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் முடிவை இந்திய அரசு எடுத்தது. அதற்கான பணத்தையும் வங்கிகளுக்கு அனுப்பியது. யார் யாருக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்பதை இந்திய ரிசர்வு வங்கி மற்றும் நபார்டு வங்கிகளின் கண்காணிப்பின் கீழ் வங்கிகள் தேர்வு செய்தன. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கடன் கணக்கிற்கு அனுப்பப்பட்டது என்று கூறிய சரத்பவார், அதேசமயத்தில் வங்கிகள் தயார் செய்த பட்டியலில் தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கலாம். தகுதியுடைய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமலும் இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொண்டார். நாட்டில் வங்கி விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கணக்குகள் 3.7 கோடி உள்ளன. அவைகளில் 90 ஆயிரத்து 576 விவசாயிகளின் வங்கி கடன் கணக்குகளை மட்டும் தணிக்கைக் குழு ஆய்வு செய்துள்ளது. அதாவது 0.25 சதவீத கணக்குகள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கணக்குகளை ஆய்வு செய்தால் முறைகேடு நடக்கவில்லை என்பது தெரியவரும். தணிக்கை குழுவின் பூர்வாங்க அறிக்கை வந்தவுடன் தணிக்கை குழுவுக்கு இந்திய ரிசர்வு வங்கியும் நபார்டு வங்கியும் கடிதம் எழுதி அனைத்து விவசாய கடன் கணக்குகளையும் விரைவில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தகுதியில்லாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்திருந்தால் அதை வங்கிகள் வசூல் செய்யும். அதேமாதிரி தகுதியுள்ள விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படாமல் இருந்தால் தகுதி உள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற்காக கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்கும் என்றும் அமைச்சர் சரத்பவார் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago