வெற்றிகரமான கேப்டன் தோனிக்கு கங்குலி பாராட்டு

March 7, 2013 விளையாட்டு

 

கொல்கத்தா, மார்ச்.7 - இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனி என்று அவருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங் குலி பாராட்டு தெரிவித்து இருக்கிறார். 

இந்தியாவின் வெற்றிகரமான கேப்ட னாக தோனி திகழ்கிறார். ஐதராபாத் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தோனி அதிக டெஸ்டில் வென்ற இந்தி ய கேப்டன் என்ற சாதனையை பெற்றார். அவர் கங்குலியை முந்தினார். 

தோனி தலைமையில் இந்திய அணி 22 டெஸ்டில் (45) வெற்றி பெற்று உள்ள து. 12 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் டிராஆனது.

இதன் வெற்றி சதவீதம் 46.88 ஆகும். கங்குலி தலைமையில் 49 டெஸ்டில் 21 - ல் வெற்றி கிடைத்தது. 13 போட்டிக ளில் தோற்றது. 15 டெஸ்ட் டிரா ஆனது.வெற்றி சதவீதம் 42.85 ஆகும். 

தனது சாதனையை முறியடித்து வெற்றி கரமான கேப்டனாக திகழும் தோனி யை முன்னாள் கேப்டன் கங்குலி பா ராட்டினார். இது குறித்து அவர் தெரிவி த்ததாவது - தோனியின் சாதனை பா ராட்டுதலுக்குரியது. போற்றக்கூடியது. 

22 டெஸ்டில் வெற்றி பெறுவது என்பது சிறிய சாதனை அல்ல. ஆஸ்திரேலியா வுக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற் று இருக்கிறார்.  

கடந்த 2 ஆண்டுகளில் மோசமான நிலையில் இருந்த அவர் தற்போது அதி லிருந்து மீண்டு நல்ல நிலைக்கு திரும் பியுள்ளார். 

பல்வேறு காலங்களில் நீங்கள் வெவ் வேறு கேப்டன்களை பார்த்து இருப்பீ ர்கள். இந்தியா, அசாரூதீன், டெண்டுல் கர், நான் (கங்குலி), டிராவிட், தோனி ஆகிய பல கேப்டன்களை கண்டு இருக் கிறது. 

கிரிக்கெட் ஓட்டத்தில் இந்த ஒவ்வொ ருவரும் அணியை முன்னோக்கி தான் கொண்டு சென்றார்கள். 

ஆனால் தோனியின் சாதனை இந்திய கிரிக்கெட்டிற்கு மிகவும் நல்லது என்ப தை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். 

இதன் மூலம் இந்திய அணி மேலும் மே ம்பாடு அடையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், தோ னி சிறந்த கேப்டன். அவர் தலைமையி ல் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோ ப்பையும், 2011 -ம் ஆண்டு 50 ஓவர் உல கக் கோப்பையும் இந்தியா கைப்பற்றி யது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம்

முல்லை நீர்மட்ட விவகாரம்: கேரள முதல்வருக்கு கடிதம்

சென்னை,நவ 17 - முல்லை பெரியாறு நீர் திறக்கப்படுவதை முறைப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது ...

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு

  சென்னை, நவ 17 - தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டுள்ள உத்தரவில், பிங்க்ளே விஜய் மாருதி - தொழில்துறை இணை செயலாளர்(சென்னை மாநகராட்சி இணை ஆணையாளர் - ப ணிகள்), சுபோத் குமார் - பள்ளிக் கல்வி துறை ...

அமெரிக்காவில் 3 மாணவரை கொன்ற கைதி தப்பியோட்டம்

  நியூயார்க், நவ 17 - அமெரிக்க பள்ளியில் 3 மாணவரை சுட்டு கொன்ற கைதி தப்பினான். அமெரிக்காவில் ஓகியோ ...

லிங்கா ஆடியோ வெளியீட்டில் ரசிகர்கள் ரகளையால் பரபரப்பு

  சென்னை, நவ 17 - ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள லிங்கா படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னை சத்யம் ...

சீன ஓபன் சூப்பர் சீரிஸ்: சாய்னா நெவால் சாம்பியன்

  புஸாவ், நவ.17 - சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் ...

பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீனா பயிற்சி

  புது டெல்லி, நவ 1 6 - இந்திய, பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு சீன படைகள் பயிற்சி ...

கிறிஸ்துமஸ் - புத்தாண்டு - பொங்கலுக்கு சிறப்பு ரெயில்கள்

  சென்னை, நவ.16 - மேல்மருவத்தூர் கோவில் திருவிழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு திருவிழா, தைப்பூசம் மற்றும் ...

2016-க்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு

  சென்னை, நவ.15 - 2016 மார்ச் மாதத்திற்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16ம் தேதி நடைதிறப்பு

  சபரிமலை, நவ 14 - மண்டல பூஜை சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற கோயில் சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலாகும். இந்த கோயிலுக்கு தமிழகம்,புதுவை,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு ...

இம்ரான்கானை கைது செய்ய பாக். நீதிமன்றம் பிடிவாரண்ட்

  இஸ்லாமாபாத், நவ 14 - பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் முன் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தெஹ்ரிக் இ இன்சாப் ...