மாமியார் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி உற்சாகம்!

March 7, 2013 அரசியல்
Presiden-Pranab(C)

  புது டெல்லி, மார்ச். 7 - வங்கதேசத்துக்குப் பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திரும்பும் வழியில் முதல் முறையாக தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு புது மாப்பிள்ளை போன்ற உணர்வு ஏற்பட்டதாம். தனது மாமியார் வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை அந்த கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். வங்காள தேசத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் புதுடெல்லி திரும்பினார். பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா, வங்காள தேசத்தில் பிறந்து வளர்ந்தவர். இப்பயணத்தின்போது மனைவியின் பெற்றோர்கள் வாழ்ந்த பத்ரபிலா கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.  அவர்கள் இருவரையும் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கனாய் லால் கோஷ், அவரது குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். வங்காள முறைப்படி, ஒரு வங்காளப் பெண்ணின் கணவரை ஜமாய் என்று அழைப்பார்களாம். அதுவும் ஒரு நாட்டின் ஜனாதிபதியே தங்கள் கிராமத்து ஜமாய் என்பதால், பிரணாப்புக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து ஜமாய்த்து விட்டார்களாம். டெல்லி திரும்பிய பிறகு, மாமியார் வீட்டுக்குப் போய் வந்த அனுபவம் குறித்து செய்தியாளர்கள் பிரணாப்பிடம் கேட்டனர். அதற்கு அவர், எங்களுக்கு 1957ல் திருமணம் ஆனதில் இருந்து முதன்முறையாக என் மாமியார் வீட்டிற்கு இப்போதுதான் சென்றேன். அந்த கிராம மக்கள் மணமகனை வரவேற்பதுபோல் என்னை வரவேற்றனர். புது மாப்பிள்ளையைப் போன்ற உணர்வுதான் எனக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது என்றார்.

சென்ற வாரம்

Meenakshi-Temple 0

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் முடக்கம்

மதுரை - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணைய தளம் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதிகள் ...

Madan Mitra1(C)

சாரதா நிதி மோசடி வழக்கு: நீதிபதியிடம் அழுத அமைச்சர்

கொல்கத்தா - சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க மாநில அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ காவலுக்கு அனுப்பாதீர் என நீதிபதியிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நாளை வரை சிபிஐ விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேற்குவங்கம் ...

Smriti Zubin Irani(C)

'ஆல் இஸ் வெல்' படத்திலிருந்து ஸ்மிருதி இராணி விலகல்

மும்பை - 'ஆல் இஸ் வெல்' எனும் இந்தித் திரைப்படத்தில் இருந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி விலகியுள்ளார். ...

Actor Vijay(C)

குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை: நடிகர் விஜய்

திருநெல்வேலி - ‘தனது குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை’ என, திருநெல்வேலியில் நடிகர் விஜய் பேசினார். ...

Venkaiya-Naidu2(C) 0

மக்களுக்கு இலவசங்கள் வழங்க கூடாது: வெங்கய்யா

நகரி - மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு திருப்பதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு...

ar-rahman

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

வாஸ்ஏஞ்சல்ஸ் - திரையுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இசையமைப்பாளர் ...

digvijay singh 2

காங்கிரசில் நக்சலைட்டுகள் சேர வேண்டும்: திக்விஜய்சிங்

பனாஜி - பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் நக்சலைட்டுகள் சேர வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த ...

Miss-south-africa(C)

தென் ஆப்பிரிக்க பெண் உலக அழகியாக தேர்வு

லண்டன் - தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ரோலென் ஸ்ட்ராஸ், 2014-ஆம் ஆண்டின் உலக அழகியாகத் ...

Pak-school rampage(C)

பாக். ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: 132 பேர் பலி

பெஷாவர் - பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளிக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 132 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 6 ...

Chandrika(C)

இலங்கையில் தேர்தல் நாளில் கலவரம் வெடிக்கும்: சந்திரிகா

கொழும்பு - இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் தற்போதைய ஜனாதிபதி ராஜபக்சே மீண்டும் ...