முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமியார் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி உற்சாகம்!

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 7 - வங்கதேசத்துக்குப் பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திரும்பும் வழியில் முதல் முறையாக தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு புது மாப்பிள்ளை போன்ற உணர்வு ஏற்பட்டதாம். தனது மாமியார் வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை அந்த கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். வங்காள தேசத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் புதுடெல்லி திரும்பினார். பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா, வங்காள தேசத்தில் பிறந்து வளர்ந்தவர். இப்பயணத்தின்போது மனைவியின் பெற்றோர்கள் வாழ்ந்த பத்ரபிலா கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. 

அவர்கள் இருவரையும் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கனாய் லால் கோஷ், அவரது குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் அன்புடன் வரவேற்றனர். வங்காள முறைப்படி, ஒரு வங்காளப் பெண்ணின் கணவரை ஜமாய் என்று அழைப்பார்களாம். அதுவும் ஒரு நாட்டின் ஜனாதிபதியே தங்கள் கிராமத்து ஜமாய் என்பதால், பிரணாப்புக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்து ஜமாய்த்து விட்டார்களாம். டெல்லி திரும்பிய பிறகு, மாமியார் வீட்டுக்குப் போய் வந்த அனுபவம் குறித்து செய்தியாளர்கள் பிரணாப்பிடம் கேட்டனர். அதற்கு அவர், எங்களுக்கு 1957ல் திருமணம் ஆனதில் இருந்து முதன்முறையாக என் மாமியார் வீட்டிற்கு இப்போதுதான் சென்றேன். அந்த கிராம மக்கள் மணமகனை வரவேற்பதுபோல் என்னை வரவேற்றனர். புது மாப்பிள்ளையைப் போன்ற உணர்வுதான் எனக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்