வெனிசூலா அதிபர் சாவேஸ் மரணம்: சோகத்தில் மக்கள்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

காரகாஸ், மார்ச். 7 - வெனிசூலா அதிபர், அந்நாட்டின் இணையற்ற தலைவர் எனப் புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. வெனிசூலாவின் புரட்சித் தலைவர் என்று புகழப்பட்டவர் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குதான். காரணம் சாவேஸ். இதனால் அந்நாட்டின் புரட்சித் தலைவர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பிரமாண்ட வெற்றி பெற்று நான்காவது முறையாக அவர் அதிபரானபோதுதான், உலகம் அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்தது. உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு நிலைகொள்ள முடியாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் சாவேஸ். ஆனால் இந்த வெற்றியையும் அவர் நினைத்த அரசியல் மாற்றங்களையும் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார் சாவேஸ். புற்று நோய் தாக்கப்பட்ட சாவேஸ், கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன. 

எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிகிச்சை முடிந்து வெனிசுலா அதிபர் சாவேஸ் 19 ம் தேதி நாடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஹியூகோ சாவேசுக்கு நேற்று முன்தினம் புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து அவர் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார். சாவேஸின் மரணம் அந்நாட்டு மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தனிமை கொல்லும்

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் எனக்கென்று யாரும் இல்லை. எனக்கென்று நண்பர்கள் இல்லை. எல்லாரும் என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என புலம்பித் தள்ளுவார்கள். இப்படிப்பட்டவர்களைத் தனிமை உணர்வு கொல்லும். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிரிட்டனை சேர்ந்த 2000 இளம் வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிருக்கின்றனர். அதில் தனிமையை உணர்வதாக கூறுபவர்களுக்கு, மற்றவர்களை விட 24 சதவிகிதம் வரை தூக்கம் குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் தனிமையை உணர்வதாக கூறுபவர்கள், தங்களால் எந்த செயலிலும் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும், நான் முழுக்க சோர்வை உணர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

100-வது பிறந்த நாள்

பிரேசில் நாட்டில் கரியா சியா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மரியா பிக்னேடன் பான்டின், பவுலினா பிக்னேடன் பான்டின். இவர்களுக்கு நாளையுடன் 100 வயது ஆகிறது. தங்களது பிறந்த நாளை பெரிய விருந்துடன் அமர்க்களமாக கொண்டாட நினைத்த இச்சகோதரிகள் விழாவுக்கு 100 பேரை அழைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

புதிய உடை

கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உடையவர்கள் அணிந்து கொள்ளக்கூடிய சிறப்பு டி-சர்ட் உடையை உருவாக்கி உள்ளனர். இதை அணிந்து கொண்டால் சுவாச நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் கண்டுபிடித்து எச்சரிக்கும். டிசர்ட்டின் மேல் உள்ள கண்ணாடி இழையால் ஆன சிறிய ஆண்டனா சென்சாராகவும், கடத்தியாகவும் செயல்படுமாம்.

நம்பர் ஒன்

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக விற்பனை செய்யப்படும் குடிநீர் குறித்து கன்சுமர் வாய்ஸ் என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை மற்றும் தரமும் நன்றாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

சசாங்காசனம்

சசாங்காசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இதனால், இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுவதால் முதுகு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

புதிய டிரெண்ட்

எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

செரபியம் காடுகள்

340 ஹெக்டேரில் பரவியுள்ள செரபியம் காடுகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ளது. நகரங்களில் இருக்கும் கழிவு நீரை, சுத்திகரித்து குழாய்கள் மூலம் இங்கு அனுப்பி மரங்களை வளர்த்துள்ளனர். இங்கு பெறப்படும் காய், கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை. கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும், சூரிய ஒளியும், இங்கு மரங்களை வேகமாக வளர வைக்கின்றன.

வயதை தாண்டி ...

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொஹன்னா குவாஸ் என்ற 91 வயது பாட்டி சிங்கப்பூரில் நடந்த ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியில் பங்கேற்று சாகசம் செய்துள்ளார். 3 வயதில் இருந்து ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்து வரும் இவர், 70 வயதுக்குப் பிறகும் 11 விருதுகளை வென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தான் திறம்பட இருப்பதற்கு ஜிம்னாஸ்டிக்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.