ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      இந்தியா
helicopter 0

 

காங்டாக்,ஏப்.24 - சிக்கிம் மாநிலம் சீன எல்லை அருகே காணாமல் போன ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கியது. இதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இருந்து புறப்பட்ட லகுரக துருவ் ஹெலிகாப்டர் ஒன்று சீன எல்லை அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் ஹெலிகாப்டரை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியது. 

நீண்ட தேடலுக்கு பிறகு ஷில்மந்திர் பகுதியில் ஹெலிகாப்டரின் சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்த 4 வீரர்களும் உயிரிழந்தனர் என தெரியவந்துள்ளது. வானிலை காரணமாக விபத்து நடந்திருந்தாலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 6 வருடங்களில் 5 துருவ ரக ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: