சவுதாலா கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ.க்கு கோர்ட்டு நோட்டீஸ்

ஞாயிற்றுக் கிழமை, 4 டிசம்பர் 2016      ஊழல்
chautala4(C)

 

புதுடெல்லி, மார்ச் 7 - ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் அஜய் சவுதாலாவின் கோரிக்கையை ஏற்று டெல்லி ஐகோர்ட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் விடுமாறு உத்தரவிட்டுள்ளது.  ஹரியானா மாநிலத்தில் 2000-ம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தில் நடைபெற்ற ஊழலை அடுத்து ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் உள்பட பலருக்கு சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி அஜய் சவுதாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி முக்தா குப்தா கூறியதாவது:

இந்த வழக்கில் அஜய் சவுதாலாவின் கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. க்கு நோட்டீஸ் விடுமாறு உத்தரவிடுகிறேன்.  மேலும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி குப்தா கூறினார். எனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோர்ட்டில் அஜ்ய் சவுதாலா மனு கொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சவுதாலா, அவரது மகன் அஜ்ய் சவுதாலாஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,

ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டிருந்தது.ஹரியானா மாநிலத்தில் 2000-ம் ஆண்டில் 3296 ஆசிரியர்களை நியமனம் செய்ததில் ஊழல் நடந்ததாகக் கூறி இவர்களுக்கு சிறைத் தண்டனை    வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.