முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயக் கடன் தள்ளுபடி ஊழல்: விசாரணைக்கு கோரிக்கை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 7 - மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ. 10,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.இந்தத் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி இருக்கிறது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்து இருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ரூ.52,000 கோடி கடன் தள்ளுபடியில் ரூ. 10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்து இருக்கிறது. 

தகுதியுடைய 34 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் தகுதியற்ற 24 லட்சம் பேர் கடன் தள்ளுபடி சலுகை பெற்று பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, ஒருசார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன் பெற்ற விவசாயிகள் ஒருமுறை தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டபோதிலும், உண்மையான, தகுதியுள்ள விவசாயிகள் பலர் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக தொகையும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவான தொகையும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதுபோன்று பாரபட்சமாக செயல்படுவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உண்மையான முகமாகும். இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 

எனவே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்; தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் ஊழல் நடந்து இருப்பது இப்போது தெரிய வந்து உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆதாயத்துக்காக அரசாங்க பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago